7.7.13

தகப்பன்சாமி


(ஜீன் மாத கதை களத்தின் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தொடக்க வரி 
'அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச்சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது...')

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச்சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது.
ஏன்ப்பா…!’ என்றான் நித்திலன். அவன் குரலிலும்  எனக்கிருந்த அதே உணர்ச்சி!
அடுத்த வருஷம் உன் பெயரைஎன்.எஸ்ல பதிவு பண்ணனும். இப்பவே கிளம்பிட்டா பிரச்சனை இல்லை!”
நான் ஏன்ப்பா என்.எஸ் போகக்கூடாது!”
இல்லடா! எப்படியும் ஊருக்கு போயிடப் போறோம்! எதுக்கு இப்ப வீணா இதுலயெல்லாம் நேரத்தை செலவு செய்யணும், சொல்லு?

இனி இங்கே தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு பேரதிர்ச்சி!
இத்தனை நாள் இதைப் பற்றி எதுவுமே சொல்லலையே! திடீர்ன்னு என்னங்க?” என்றேன்.
இல்லம்மா! கொஞ்ச நாளாவே இதை யோசிச்சுகிட்டு தான் இருந்தேன். நான் வாழ்ந்த வீடு, படிச்ச பள்ளி, விளையாடிய இடம்..... உனக்கும் தான்! இதையெல்லாம் எப்படிம்மா விட்டுட்டு கடைசி வரை இங்கேயே இருக்கறது? அப்பா அம்மா தான் இல்லை! ப்ச்... இதை முன்னவே யோசிச்சிருந்தா கடைசி காலத்திலயாவது  அவங்க கூட இருந்திருக்கலாம்!”

நித்திலனின் முகம் வாடிப் போய் விட்டது.
அறைக்குள் சென்று நூலக புத்தகத்தோடு அமர்ந்து கொண்டிருந்தாலும், அவனுடைய கவனம் புத்தகத்தில் இல்லை என்று புரிந்தது. அவன் கை அருகில் இருந்த செய்தித் தாளின் ஓரத்தை சுருட்டியும் நீவியும் விட்டபடி இருந்தது.
 
எனக்கும் பழைய நினைவுகள் அவ்வப்போது வந்து சென்றபடி தான் இருந்தன. அதிலும் சொந்த குடும்பத்தினரைக் கூட தினமும் பார்த்து பேச முடியாமல் போகும் இப்போதைய இயந்திரத்தனமான வாழ்கையில், வங்காள விரிகுடா ஞாபகங்கள் ஏற்படத்தான் செய்தன.

ஆனாலும் பிள்ளைகள் படிக்க, கைநிறைய சம்பாதிக்க என்று இருக்கும் நல்ல ஒரு வாய்ப்பை எப்படி விடுவது! அதிலும் வசதியான வாழ்க்கைக்கு
பழக்கப்பட்டு விட்டு அங்கே போய் கொசுக்கடியில் அல்லாடி... இங்கே கணினியிலேயே அனைத்தையும் முடித்து விடலாம். அங்கேயென்றால் ஒவ்வொன்றிற்கும் நாள் கணக்கில் அலைய வேண்டியிருக்கும்.....

இரவு செய்தி பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது,
அப்பா!” என்று அழைத்தான் நித்திலன்.  
சற்று தயங்கி விட்டு
நான் விளையாடிய ப்ளே கிரௌண்ட், என்னோட நண்பர்கள், என்னோட பள்ளிக்கூடம் எல்லாம் இங்க தானேப்பா இருக்கு. இதையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குப்பாஎனக்கு என் நண்பர்கள் கூட சேர்ந்து என்.எஸ் செய்யணும்ன்னு ஆசையா இருக்கு! எல்லோர் கூடவும் படிச்சுட்டு, நான் மட்டும் என்.எஸ் செய்யமாட்டேன்னு சொல்றது தப்பில்லையாப்பா…!”  என்றான்.

இரவு, தூங்கிக்கொண்டிருந்த மகனின் தலையை கோதிவிட்டப்படி பக்கத்தில் அமர்ந்திருந்தார் கணவர். அவர் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.
N.S- National Service
(இந்த கதைக்கு முதல் பரிசு கிடைத்தது)


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

என்ன ஒரு புத்திசாலித்தனமான அப்ரோச்!

முதல்பரிசுக்கு வாழ்த்துகள். கொடுக்கப்படும் குறைந்த வார்த்தைகளை நம் கருவுக்கு இழுத்து வருவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

HVL said...

மிக்க நன்றி
திண்டுக்கல் தனபாலன், ஸ்ரீராம்.

அப்பாதுரை said...

பாராட்டுக்கள்.
அரைப்பக்கத்தில் ஆழமான தத்துவம்.
என் எஸ் என்றால் என்ன?

HVL said...

@ அப்பாதுரை
மிக்க நன்றி !
N.S- National service
(ஆழமான தத்துவம், ம்ம்ம். . . ! ச்சே, ச்சே! அப்பாதுரை சார் கிண்டலெல்லாம் செய்யமாட்டார்.)

இராஜராஜேஸ்வரி said...

முதல்பரிசுக்கு வாழ்த்துகள்.

HVL said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

அப்பாதுரை said...

என்ன இப்படி சொல்றீங்க? தகப்பன்சாமி பெரிய தத்துவம் இல்லையா? பெற்றவர்கள் அடிக்கடி தடுக்கி விழும் சமாசாரமாச்சே?

HVL said...

mmm ....I agree with you.

Ranjani Narayanan said...

மகனைப் புரிந்து கொண்ட தந்தை!
முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்!