3.10.15

துரோகமிழைத்தல்


மன்னிக்க முடியாத ஒன்றாய் படுவது

நம்பிக்கை துரோகம்.

 எதிர்பாரா நேரத்தில்

எதிர்பாரா மனிதரிடமிருந்து

எதிர்பாராமல் வரும் துரோகங்கள்

நிலைகுலைய வைப்பவை . . .


 அலைகளின் நடுவே

ஸ்திரமாய் நிற்பதாய்

நினைத்திருக்கும் நேரம்

திடுமென காலடியில்

சரியும் மணல் போல

வாரிவிடக் கூடியவை!


 துரோகமிழைக்கப் பட

என்ன தவறு செய்தோமென

மன அலசல் செய்து

சில நாட்கள் குழம்பி,

மெல்ல கோபமாய் மாற்றி,

துரோகமிழைத்தவர் மேலதை எய்து,

தெய்வம் நின்று கொல்லு மென

சமாதானம் சொல்லி,

துரோகமிழைத்தவர் சங்கடப்படுவதாய்

நாம் எண்ணும் போதெல்லாம்

தனக்கிழைத்ததால் தான் இந்நிலையென திருப்திபட்டு,

அவரும் அதை உணர்வாரென நம்பி,

ரணத்தை நக்கும் நாயென

பலநாட்கள் திரிந்த பின்னர்

அத்துரோகம் மெல்ல இயல்பாகிறது.
 

சில ஆண்டுகள் கழித்துப்

பார்க்கும் போது

அன்று துரோகமிழைத்தவர்

இழைத்தது துரோகமாவென்ற

சந்தேகம் எழவே செய்கிறது!

5 comments:

HVL said...

சுய அலசல் செய்து கொள்ள ஒரு இடைவெளி தேவைப் பட்டது. கொஞ்சம் பெரிய இடைவெளி தான்!
விசாரித்துச் சென்ற அப்பாதுரை சாரின் அன்புக்கு நன்றி!

ஸ்ரீராம். said...

வெல்கம் பேக்!

அப்பாதுரை said...

வலைப்பக்கம் அடிக்கடி வரமுடியவில்லை.

get over it என்பது அற்புதமான கொள்கை - உணர்ந்து பார்த்தால் அதன் எளிமையும் ஆழமும் புரியும். ரணத்தை நக்கும் நாய் - யப்ப்ப்ப்ப்பா!

ஸ்ரீராம். said...

நலமா? உங்கள் மெயில் ஐடி வேண்டுமே...

HVL said...

நன்றி அப்பாதுரை மற்றும் ஸ்ரீராம்